தகானுவில் விவசாயி வைத்த வலையில் சிறுத்தைப்புலி சிக்கியதால் பரபரப்பு


தகானுவில் விவசாயி வைத்த வலையில் சிறுத்தைப்புலி சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2018 4:00 AM IST (Updated: 18 Jan 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

தகானுவில் விவசாயி வைத்திருந்த வலையில் சிறுத்தைப்புலி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர்.

வசாய்,

தகானுவில் விவசாயி வைத்திருந்த வலையில் சிறுத்தைப்புலி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர்.

வலையில் சிக்கியது

பால்கர் மாவட்டம் தகானு சோகவ் கிராமத்தை சேர்ந்தவர் சம்பாலால். விவசாயி. இவரது விளைநிலத்தில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதனால் இழப்பை சந்தித்த அவர், வனவிலங்குகளின் வருகையை சமாளிக்க அங்கு வலை விரித்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 5 மணியளவில் சம்பாலால் விளைநிலத்திற்கு வந்தபோது, அந்த வலைக்குள் சிறுத்தைப்புலி ஒன்று சிக்கி, அங்குமிங்குமாக திமிறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பாலால், வனத்துறையினருக்கு தெரியப்படுத்தினார்.

வனத்துறையினர் மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், வலையில் சிக்கி இருந்த சிறுத்தைப்புலியை பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வலையில் சிக்கியது 7 வயது நிரம்பிய ஆண் சிறுத்தைப்புலி. இரை தேடி வந்தபோது விவசாயி வைத்திருந்த வலையில் சிக்கியுள்ளது. தற்போது அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

Next Story