ஆதம்பாக்கத்தில் 8-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆதம்பாக்கத்தில் 8-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பெரியார் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா. இவரும், சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லோகித்ராம் (வயது 15), வேல்ரீத்திக் (12) என 2 மகன்கள் உள்ளனர்.
வேல்ரீத்திக், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வெங்கடேசன், அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். லோகித்ராம் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டார்.
வீட்டின் அருகில் உள்ள பாட்டி வீட்டில் இருந்த வேல்ரீத்திக், உடைகளை மாற்ற செல்வதாக பாட்டியிடம் கூறி விட்டு தனது வீட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த பாட்டி, வீட்டுக்கு தேடிச்சென்றார்.
கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் வெங்கடேசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வேல்ரீத்திக் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், மாணவர் வேல்ரீத்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் வேல்ரீத்திக்கின் தந்தை வெங்கடேசன் நிருபர்களிடம் கூறும்போது, “என் மகன் மிகவும் தைரியமானவன். அவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அவனது சாவில் மர்மம் இருப்பதாக எனக்கு தெரிகிறது. எனவே போலீசார் விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

Related Tags :
Next Story