ஏழை பெண்களுக்கு குறைந்த விலையில் ‘நாப்கீன்’கள் வழங்குவது பற்றி பரிசீலிக்கவேண்டும் மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


ஏழை பெண்களுக்கு குறைந்த விலையில் ‘நாப்கீன்’கள் வழங்குவது பற்றி பரிசீலிக்கவேண்டும் மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Jan 2018 4:00 AM IST (Updated: 18 Jan 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

ஏழை பெண்களுக்கு குறைந்த விலையில் ‘நாப்கீன்’கள் வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

ஏழை பெண்களுக்கு குறைந்த விலையில் ‘நாப்கீன்’கள் வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பொதுநலன் மனு

மும்பை ஐகோர்ட்டில் பெண்கள் நல அமைப்பு ஒன்று சமீபத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘நாப்கீன்’ களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் மற்றும் ‘நாப்கீன்’கள் குறித்து கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறைந்தவிலைக்கு ஏழை பெண்களுக்கு ‘நாப்கீன்’கள் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நரேஷ் பாட்டீல், நித்தின் சம்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

குறைந்தவிலை ‘நாப்கீன்’கள்

இதில், மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏழை பெண்களுக்கு குறைந்த விலையில் ‘நாப்கீன்’கள் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் கிராமப்புற பெண்களுக்கும் ‘நாப்கீன்’கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குறைந்த விலைக்கு அவர்களுக்கு ‘நாப்கீன்’கள் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட துறை முதன்மை செயலாளர்கள் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

அடுத்த விசாரணையின் போது ‘நாப்கீன்’களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Next Story