பெரம்பூரில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவர் சாவு
பெரம்பூரில் தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர், அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரபாவை. இவர்களுக்கு ரேஷ்மா (வயது 18) என்ற மகளும், நரேந்தர்(15) என்ற மகனும் உள்ளனர்.
ரேஷ்மா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நரேந்தர், திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இறைவணக்கம் முடிந்து மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு திரும்பினர்.
வகுப்பறைக்கு வந்து அமர்ந்து இருந்த நரேந்தர், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.
ஆனால் நரேந்தர், சுயநினைவு இன்றி இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் நரேந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சென்னை வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி பசுபதி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் ஆகியோர் அந்த தனியார் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் அருள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடமும் மாணவரின் சாவு குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story