மனித ரோபோக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
மனிதனைப் போல ஒரு எந்திரத்தை உருவாக்கிட வேண்டும் என்பது மனிதனின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு பல்வேறு கட்டங்களைக் கடந்து தற்போது மனிதனைப் போலவே ஒரு ரோபோவை உருவாக்க வைத்துள்ளது. இப்போது அதனை பெருமளவில் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டார்கள்.
உலகின் முதல் மனித உருவ அமைப்பு கொண்ட ரோபோக்களை உருவாக்குவதற்கான தொழிற்சாலை துருக்கியில் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டின் கொன்யா நகரத்தில் உள்ள அனடோலியன் மாகாணத்தில் உலகின் முதல் மனித உருவ அமைப்பை கொண்ட ரோபோக்களை தயாரிக்கும் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. அகின்சாப்ட் மென்பொருள் நிறுவனத்தால், தி அகின் ரோபோட்டிக்ஸ் என்ற பெயரில் மனித உருவ அமைப்புள்ள ரோபோ தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அகின்சாப்ட் நிறுவனத்தினர் தெரிவிக்கையில், “மனிதர்களை போன்ற தோற்றத்துடன் பெருமளவில் ரோபோக்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். வரும் தலைமுறைக்கான இந்த மனித ரோபோக்களுக்கு ‘ஏடிஏ ஜிஎச்5’ என்ற பெயர் வைத்துள்ளோம். இந்த ரோபோக்களை ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், ஏர்போர்ட், வீடு, மருத்துவமனை என விரும்பும் இடங்களில் பயன்படுத்தலாம். அதற்கு ஏற்ப நாங்கள் வடிவமைத்து வருகிறோம். இந்த மனித ரோபோவால் கேட்கவும், பேசவும், நுகரவும் முடியும். மேலும் இணையத்தை பயன்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்துள்ளோம்” என்றனர்.
மனித ரோபோக்களை உருவாக்குவதற்காக அகின்சாப்ட் நிறுவனமானது 2009-ல் தனது தொழிற்சாலையை நிறுவியது, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின் முயற்சியாக 2011-ல் தனது முதல் மாடல் ரோபோவை உருவாக்கியது. இந்த நிறுவனமானது 1.13 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த திட்டத்துக்காக முதலீடு செய்துள்ளது. இனி மனிதர்களை போல் எல்லா பணிகளையும் இந்த ரோபோக்கள் செய்யும் என்பதால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் மனிதர்களுக்கு பறிபோகும் அபாயமும் உள்ளது.

Related Tags :
Next Story