ஹஜ் புனித பயண மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஹஜ் புனித பயண மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:45 PM GMT (Updated: 18 Jan 2018 7:05 PM GMT)

ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

இஸ்லாமியர்கள் வாழ் நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்), பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பேசினர்.

கோஷங்கள்

இதில் நிர்வாகிகள் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர், மகேஷ் லாசர், யூசுப்கான், ஐ.என்.டி.யூ.சி. அனந்தகிருஷ்ணன், அனிதா, ஏ.ஆர்.சிவகுமார், தங்கம் நடேசன், குமரன், அலெக்ஸ், முகைதீன் சாகுல்அமீது, வைகுண்டதாஸ், கால பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஹஜ் பயண மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story