விக்கிரமசிங்கபுரம், சிவகிரி பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


விக்கிரமசிங்கபுரம், சிவகிரி பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 19 Jan 2018 2:30 AM IST (Updated: 19 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம், சிவகிரி பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம், சிவகிரி பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் சட்ட அமைச்சர் சுப்பையா தலைமை தாங்கி, அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மணிமுத்தாறு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விசுவநாதபேரி

சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரியில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் வாசுதேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மூர்த்திப்பாண்டியன் முன்னிலையில், மனோகரன் எம்.எல்.ஏ. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சாமிவேல், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவகிரி பஸ் நிலையம் முன்பு உள்ள கொடிகம்பத்தில் மனோகரன் எம்.எல்.ஏ. கட்சிக்கொடி ஏற்றினார்.

சிவகிரி

அதேபோல், சிவகிரி ராஜ் நியூ ஆங்கிலப்பள்ளியில் நடந்த விழாவில் மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி முதல்வர் ராமர் வரவேற்றார். துணை தலைமை ஆசிரியை ராஜம்மாள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகிரி அருகே ராமநாதபுரத்தில் கட்சியின் கிளை நிர்வாகிகள் கணேசன், ஆண்டி நாடார் ஆகியோர் முன்னிலையில் கட்சி கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல் சிவகிரியில் தினகரன் அணி சார்பில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு தினகரன் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். சிவகிரி நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story