பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 33 பேர் காயம்
மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கியது. புனித வியாகுல மாதா திடலில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலுக்கு காளைகள் அழைத்து வரப்பட்டன. திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
முதலில் செவலூர் மணிக்கவுண்டர் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. முதல் காளையே களத்தில் சிறிது நேரம் நின்று தன் அருகில் யாரையும் நெருங்க விடாமல் சீறிப்பாய்ந்ததால் ஜல்லிக்கட்டு களம் உற்சாகமாக களைகட்டத் தொடங்கியது. அதன் பின்னர் பொத்தமேட்டுப்பட்டி ஊர் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. இருப்பினும் பல காளைகளையும் மாடுபிடி வீரர்கள் பிடித்து அசத்தினர். காளையை மாடுபிடி வீரர்கள் அடக்கும் போதும், காளை களத்தில் தன்னை வீரர்கள் நெருங்க விடாமல் மிரட்டிய போதும் திடலில் இருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், பிரிட்ஜ், ஆட்டுக்குட்டி, சில்வர் பாத்திரங்கள், டேபிள், பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டிற்கு மொத்தம் 600 காளைகள் வந்த நிலையில் 19 காளைகள் தகுதியில்லாததால் 581 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதேபோல் 373 மாடுபிடி வீரர்களில் 8 பேருக்கு உடல் தகுதி இல்லாததால் 365 வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு குழுக்களாக களம் இறங்கி விடப்பட்டனர். இதில் விதிமுறைகளை மீறிய இரண்டு மாடுபிடி வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 மாடுபிடி வீரர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் 14 மாடுகளை பிடித்து அசத்திய மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த அடைக்கன் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் பரிசை பனந்தோப்பு தேவசகாயம் காளை வென்றது. பரிசுகளை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் ஆகியோர் வழங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பொத்தமேட்டுப்பட்டி விழாக்குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கண்டுகளித்தனர். ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர், மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டு, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணித்தனர்.

Related Tags :
Next Story