டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். மேலும், அணையில் உள்ள நீர்இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால், நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
அணையில் உள்ள நீர் இருப்பை பயன்படுத்தி இந்த மாதம் இறுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்ததால் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக நேற்று காலை முதல் அணையில் இருந்து பாசனத்தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நீர்மட்டம் 53.34 அடி
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. அதாவது, நேற்று முன்தினம் வினாடிக்கு 139 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 59 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு பலமடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 53.67 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 53.34 அடியாக குறைந்தது.

Related Tags :
Next Story