போலீஸ் துறையை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
போலீஸ் துறையை கண்டித்து நாகையில் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் துறையை கண்டித்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, செம்பதனிருப்பு கிராமத்தில் நடைபெற்ற தகராறை சமரசம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவில் போலீசார் அந்த அதிகாரி மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே அதிகாரி மீது பொய் வழக்கு போட்ட போலீஸ் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை நன்றி கூறினார்.

Related Tags :
Next Story