மேல்விஷாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மேல்விஷாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:00 AM IST (Updated: 19 Jan 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம் பயணிகளுக்கு வழங்கப்படும் ‘ஹஜ்’ மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து மேல்விஷாரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆற்காடு,

முஸ்லிம் பயணிகளுக்கு வழங்கப்படும் ‘ஹஜ்’ மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து மேல்விஷாரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசாத் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விநாயகம், மேல்விஷாரம் நகர தலைவர் அப்துல் சுக்கூர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மத்திய அரசை கண்டித்தும், ‘ஹஜ்’ பயணிகளுக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நகர துணைத் தலைவர் முசாபர், பொருளாளர் சுகேல் அகமது, ஆற்காடு நகர தலைவர் கண்ணன், திமிரி ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா நகர துணைத் தலைவர் கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story