செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 24-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
செய்யாறு,
செய்யாறு டவுன் திருவோத்தூரில் உள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதினர். பின்னர் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு அபிஷேகம், ஆராதனை செய்து கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து கற்பக விருட்ச காமதேனு வாகனத்தில் பாலகுஜாம்பிகை, வேதபுரீஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சூரிய, சந்திர பிரபை வாகனத்திலும், 3-வது நாளான நாளை (சனிக்கிழமை) பூத வாகனத்திலும், 4-வது நாளான 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெரிய நாக வாகனத்திலும், 5-வது நாளான 22-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகார நந்தி வாகனத்திலும் பாலகுஜாம்பிகை, வேதபுரீஸ்வரர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தேரோட்டம்
பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலாவும், இரவில் அம்மன் தோட்ட உற்சவத்துடன் திருக்கல்யாண யானை வாகன சேவையும் நடக்கிறது. 7-வது நாளான 24-ந் தேதி (புதன்கிழமை) கோவில் நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனர்.
விழாவின் 8-வது நாளான 25-ந் தேதி (வியாழக்கிழமை) குதிரை வாகனத்திலும், 9-வது நாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நந்தி வாகனத்திலும் பாலகுஜாம்பிகை, வேதபுரீஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் 10-வது மற்றும் நிறைவு நாளான 27-ந் தேதி (சனிக்கிழமை) நடராஜர் உற்சவம், மாலையில் தீர்த்தவாரி, இரவில் கொடியிறக்கம் மற்றும் ராவணேஸ்வரர் திருக்கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
ஏற்பாடுகளை திருவண்ணாமலை உதவி ஆணையாளர் மோகனசுந்தரம், செய்யாறு ஆய்வாளர் ராஜா, செயல் அலுவலர் உமேஷ்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story