வாடகை ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வேண்டும்: எண்ணெய் நிறுவனங்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
வாடகை ஒப்பந்த காலத்தை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரித்து தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்,
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன.
இவை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் கியாசை மொத்தமாக டேங்கர்களில் எடுத்துச்சென்று நாடு முழுவதும் உள்ள கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் மையங்களுக்கு (பாட்டிலிங் பிளான்டு) கொண்டு சேர்க்கின்றன.
மண்டல வாரியான டெண்டர்
இதற்காக ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் மண்டல வாரியான டெண்டர் மூலம் வாடகைக்கான விலைப்புள்ளியை நிர்ணயம் செய்து வழங்கி வருகின்றன. இந்த முறை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரைக்கான டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. பிறகு திடீரென அந்த டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே பிரதமரின் அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதிக அளவில் டேங்கர் லாரிகள் இயங்க வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பில் நாமக்கல் பகுதியில் தற்போது புதிதாக கடந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வாங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இதனால் நாமக்கல் பகுதியில் மொத்தம் 7,500 டேங்கர் லாரிகள் உள்ளன.
ஏற்கனவே இருந்த டெண்டர் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை இயக்க டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்து, அதன்படி இப்போது லாரிகள் இயங்கி வருகின்றன.
வேலைவாய்ப்பு இழக்க நேரிடும்
இந்த நிலையில் மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மண்டலம் வாரியாக அறிவிக்கப்பட்ட வாடகை டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டு இனி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே டெண்டர் அறிவிக்கப்படும். மேலும் வாடகை டெண்டரில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள முடியும் எனவும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.
மாநில அளவில் டெண்டர் நடைபெற்றால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பதிவெண் உள்ள 4,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த 4 மாநில பதிவெண் கொண்ட சுமார் 3 ஆயிரம் லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் முறையிட்டனர்.
பொதுக்குழு கூட்டம்
இதன்பிறகும் டெண்டர் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் எண்ணெய் நிறுவனங்கள், வாடகை ஒப்பந்த காலத்தை வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க, டேங்கர் லாரி உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த நெருக்கடியான சூழலில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார்.
நிராகரிப்பு
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
வாடகை ஒப்பந்த காலத்தை வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரிப்பது. மண்டல அளவிலான வாடகை டெண்டர் முறை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமருக்கு கோரிக்கையை மின்னஞ்சல் அனுப்புவது. மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மண்டல அளவில் டெண்டரை நடத்த மத்திய அரசு முன்வரவில்லை எனில் புதிய டெண்டரில் லாரி உரிமையாளர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என சங்க நிர்வாகிகள் கூறினர்.
இதில் சங்க செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணபதி, உபதலைவர் தங்கவேல், துணைத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் கணேசன், துணை செயலாளர் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story