மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் பங்கேற்றார்.
கோவை,
ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் கணபதி சிவக் குமார், உப்பிலிபாளையம் பள்ளிவாசல் தலைமை இமாம் ஜலாலுதீன் பாகவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்ததை மானமுள்ள இந்தியனும், இந்துக்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே மானியத்தை திரும்ப வழங்க வேண்டும். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, ஜெயின் உள்பட அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் பாரத தாய் பெற்றெடுத்த மக்கள் தான். அந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். ஆயிரம் மோடி வந்தாலும் எங்களிடையே கோடு போட முடியாது. நாங்கள் ஒன்றாகவே நிற்போம். நன்றாகவே வாழ்வோம்.
ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பச்சைமுத்து, வக்கீல் கருப்புசாமி, ராம்கி, சாய் சாதிக், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவிதா, போஸ், நாம நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக குமரி அனந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாமிய பெருமக்களின் 5 புனித கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம். இந்தியாவில் பிறந்தவர்கள் அத்தனை பேரும் என்ன சலுகைகளை பெறுகிறார்களோ அதுதான் நம்மை உயர்த்தும். ஆனால் ஹஜ் பயணத்திற்கு இதுவரை கொடுத்து வந்த, அதுவும் காங்கிரஸ் காலத்தில் கொடுத்து வந்த அந்த மானியத்தை பிரதமர் மோடி ரத்து செய்து இருப்பது சரியானது அல்ல.
இந்திய நாட்டில் வாழ்பவர்களின் வழிபாட்டு முறைகளை எல்லாம் நாங்கள் மதிப்போம் என்பதுதான் அம்பேத்கர் எழுதி கொடுத்த அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிநாதம். எனவே மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற மோடி அரசு செய்த காரியம் மிகவும் மோசமானது. எனவே ரத்து செய்த மானியத்தை மீண்டும் கொடுத்து விட்டு, மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதற்கு நல்ல முறையில் தீர்வு காணாவிட்டால் ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாறும். அந்த நிலை ஏற்படாமல் ரத்து செய்த மானியத்தை மீண்டும் கொடுக்க வேண்டும். ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்ததன் மூலம், பிரதமர் மோடி இந்த நாட்டை ஆளும் தகுதியை இழந்து விட்டார் என்பதுதான் எங்களது கருத்து.
மானியத்தை மீண்டும் கொடுக்காவிட்டால் அனைத்து கட்சிகளையும் திரட்டி மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story