மாணவர்கள் தொழில் முனைவோர்களாக திகழும் வகையில் கல்வி கற்க வேண்டும், கலெக்டர் வீரராகவராவ் பேச்சு
மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக திகழும் வகையில் கல்வி கற்க வேண்டும் என கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.
மதுரை,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சியை கலெக்டர் வீரராகவராவ் மதுரை பாத்திமா மகளிர் கலைக்கல்லூரியில் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
கண்காட்சியில் 11 மகளிர் சுய உதவிக்குழுவினர் மதுரை மாவட்டத்தில் இருந்தும், 20 மகளிர் சுய உதவிக்குழுவினர் வெளிமாவட்டங்களில் இருந்தும் பங்கு பெற்றுள்ளனர். இதில் அலங்கார நகைகள், சணல் பொருட்கள், மென் பொம்மைகள், உணவு வகைகள், சுடுமண் பொம்மைகள், சத்துமாவு வகைகள் மற்றும் செடி வகைகள் போன்றவை அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் படித்து முடித்த உடன் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக திகழ்ந்து பிறருக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில் கல்வி கற்றிட வேண்டும். ஒவ்வொரு அரங்கில் சுயஉதவிக் குழுக்களுடன் மாணவர்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில்முனைவோர்களாக திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும்.
இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மேற்கொண்டு பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். மேலும் தூங்கா நகரமான மதுரை மாவட்டத்தை மாசில்லா மதுரையாகவும் உருவாக்கிட ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அருண்மணி, பாத்திமா கல்லூரி முதல்வர் செலின் சகாயமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story