செங்குளம் காலனியில் நுண்ணுரம் செயலாக்க மையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு- முற்றுகை
திருச்சி செங்குளம் காலனியில் நுண்ணுரம் செயலாக்க மையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த, கட்டிட பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டனர்.
திருச்சி,
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே செங்குளம் காலனி மற்றும் என்.எம்.கே. காலனி பகுதியில் மாநகராட்சி சார்பில் நுண்ணுரம் செயலாக்க மைய கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகளை அந்த பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினார்கள். நுண்ணுரம் செயலாக்க மையம் கட்டினால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இந்நிலையில் நேற்று காலை நுண்ணுரம் செயலாக்க மைய கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கியது.
இது பற்றி அறிந்த பொதுமக்கள் கட்டிட பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி பணிகளை தொடங்கலாம் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாநகராட்சி உதவி கமிஷனர் தயாநிதி அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் தான் உள்ளது. ஆனால் கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என தடையாணை எதுவும் பெறவில்லை, என்றார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிப்பதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story