மணிமுத்தாறு அணையில் இருந்து 4-வது ரீச்சில் இருக்கும் 10-வது மடைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்
மணிமுத்தாறு அணையில் இருந்து 4-வது ரீச்சில் இருக்கும் 10-வது மடைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
நெல்லை,

விவசாயிகள் கோரிக்கை மனு
வெள்ள உபரி நீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்க தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் சுதாகர் பாலாஜி, பொருளாளர் பூபதி பாண்டியன் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் 4-வது ரீச்சில் உள்ள 10-வது மடைக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட 450 கனஅடி தண்ணீரில் சுமார் 375 கனஅடி தண்ணீர் 1 மற்றும் 2-வது ரீச் குளங்களுக்கு செல்கின்றன. 75 கனஅடி தண்ணீர் மட்டுமே 3,4-வது ரீச் குளங்களுக்கு வந்து சேருகின்றன.
விவசாயம் பாதிப்பு
4-வது ரீச்சில் உள்ள 10-வது மடையில் கடையன்குளம், விஜயஅச்சம்பாடு உள்ளிட்ட 15 குளங்கள் உள்ளன. இந்த குளங்களை சுற்றி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் சரியாக கிடைக்காததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
விவசாயிகளின் நலன்கருதி 10-வது மடைக்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் திசையன்விளையை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story