தானேயில் 26 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து 150 பேர் பத்திரமாக மீட்பு


தானேயில் 26 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து 150 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 20 Jan 2018 4:15 AM IST (Updated: 20 Jan 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் 26 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 150 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தானே,

தானேயில் 26 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 150 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தீப்பிடித்தது

தானே, ஹரிநிவாஸ் பகுதியில் உள்ளது 26 மாடிகளை கொண்ட கிரிராஜ் குடியிருப்பு கட்டிடம். இந்த கட்டிடத்தில் மறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்த் தேவ்காரேயின் மகன் நிரன்ஜன் தேவ்காரே எம்.எல்.சி. மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளத்திற்கு இடையே செல்லும் மின்வயர்களில் திடீரென தீப்பிடித்தது.

இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் உருவானது. இதைப்பார்த்து குடியிருப்புவாசிகள் அலறி அடித்துக்கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர்.

150 பேர் மீட்பு

இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்த சுமார் 150 குடியிருப்புவாசிகளை மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சுமார் ஒரு மணிநேரத்தில் கட்டிடத்தில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த கட்டிடத்தில் உள்ள மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் வசந்த் தேவ்காரேயின் வீட்டிற்கு தீ விபத்து நடந்த சில மணிநேரங்களுக்கு முன் தான் முன்னாள் முதல்- மந்திரி சுஷில் குமார் ஷிண்டே வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story