திருமணமான 6 மாதத்தில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தற்கொலை, கணவர் கைது


திருமணமான 6 மாதத்தில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தற்கொலை, கணவர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2018 3:45 AM IST (Updated: 20 Jan 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

புழுதிவாக்கத்தில் திருமணமான 6 மாதத்தில் கம்ப்யூட்டர் பெண் என்ஜீனியர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் ராம்நகர், ராமலிங்க நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தீபிகா (24). இவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தீபிகா, தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், இதனால் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியதாகவும், அதற்கு கவுதம் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த தீபிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் தீபிகாவின் தந்தை கிருஷ்ணன், மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து, தீபிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் கவுதமை கைது செய்தனர்.

தீபிகாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

Next Story