அதிகாரிகளை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் மவுன போராட்டம்


அதிகாரிகளை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் மவுன போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2018 4:15 AM IST (Updated: 20 Jan 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு அதிகாரிகளை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் மவுன போராட்டம் நடத்தினர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் மற்றும் திருமங்கலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பால்காரத்தெரு மற்றும் பள்ளத்தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுங்குவார்சத்திரத்திற்கு செல்ல பிரதான சாலை வசதிகள் இல்லாமல் அந்த பகுதி மக்கள் அவதி பட்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை தற்பொது ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குறுகிய பாதையையே பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இரு கிராம ஊராட்சிகு உட்பட்ட பால்காரத்தெரு மற்றும் பள்ளத்தெருவில் எந்த வித அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தால் செய்து தரப்பட வில்லை. முறையான சாலை வசதிகள், கழிவுநீர் வசதிகள் என எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால் அந்த பகுதி முதியோர்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

கழிவு நீர் சாலைகளிலேயே தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. போதிய சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் , குறுகிய சாலைகளில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கோ, தீயணைப்பு துறை வாகனம் செல்வதற்கோ வழியில்லாமல் உள்ளது

அவசர காலங்களில் மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவும் முடியவில்லை. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்.

அதனைதொடர்ந்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளான பிரதான சாலையுடன் இணைக்கும் அணுகு சாலை அமைக்கவேண்டும். கழிவு நீர் கால்வாய் அமைத்திட வேண்டும். சீரான சாலை வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும், நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் மவுன போரட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story