பொறுமையை இழப்பதற்குள் ‘என்னை மந்திரிசபையில் சேர்க்க வேண்டும்’ நாராயண் ரானே எச்சரிக்கை
“நான் எனது பொறுமையை இழப்பதற்குள், என்னை மந்திரிசபையில் சேர்க்க வேண்டும்” என்று நாராயண் ரானே எச்சரிக்கை விடுத்தார்.
மும்பை,

நாராயண் ரானே
காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே, மராட்டிய சுவாபிமான் பக்ஷ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார். அவருக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்து இருந்தார். நாட்கள் கடந்தும், நாராயண் ரானேக்கு இன்னமும் மந்திரி பதவி அளிக்கப்படவில்லை.
இதனால், விரக்தி அடைந்த அவர், நேற்று மும்பையில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “நான் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க போகிறேன். என் பொறுமையை இழப்பதற்குள், எனக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றி அவர் முடிவு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பசுமை சுத்திகரிப்பு ஆலை திட்டம்
மேலும், ரத்னகிரி மாவட்டத்தில் அமைய உள்ள பசுமை சுத்திகரிப்பு ஆலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நாராயண் ரானே, இந்த விவகாரத்தில் சிவசேனா இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார்.
அதாவது ஒருபுறம் பசுமை சுத்திகரிப்பு ஆலை திட்டத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்றொரு புறம் இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த அக்கட்சியை சேர்ந்த மந்திரி சுபாஷ் தேசாய் அனுமதி அளிப்பதாகவும் நாராயண் ரானே குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story