ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மும்பை மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,

ரூ.4 ஆயிரம் லஞ்சம்
மும்பையை சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவர் உணவு விடுதி நடத்த அனுமதி கேட்டு லோயர் பரேலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மாநகராட்சி பெண் அதிகாரி வீணா ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக தந்தால் உரிமம் தருவதாக தெரிவித்தார். வாலிபர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை ரூ.4 ஆயிரம் தருவதாக அதிகாரியிடம் கூறினார். இதை அதிகாரி வீணாவும் ஏற்றுக்கொண்டார்.
2 அதிகாரிகள் கைது
இந்தநிலையில் வீடு திரும்பிய வாலிபர் லஞ்சம் கொடுக்க மனம் இன்றி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து பெண் அதிகாரி வீணாவை கையும், களவுமாக பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து, அதை அதிகாரியிடம் வழங்குமாறு தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த யோசனைப்படி வாலிபர் அந்த பணத்தை பெண் அதிகாரி வீணாவை சந்தித்து கொடுத்தார்.
ஆனால் அவர் பணத்தை வாங்காமல் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி சந்தீப் கமலாக்கரிடம் அதை கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து வாலிபர் அந்த அதிகாரியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி சந்தீப் கமலாக்கரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், அதிகாரி வீணாவையும் கைது செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story