திருமணத்தால் கொட்டும் வருமானம்!


திருமணத்தால் கொட்டும் வருமானம்!
x
தினத்தந்தி 20 Jan 2018 2:30 PM IST (Updated: 20 Jan 2018 1:42 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்தால் அந்நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இளவரசர் ஹாரி- மெர்க்கல் திருமணத்தால் 500 மில்லியன் பவுண்டுகள் வருமானம் கிடைக்கும் என்று அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

இவர்களின் திருமணம் வரும் மே மாதம் 19-ம் தேதி விண்ட்ஸர் அரண்மனையில் நடைபெறவிருக்கிறது. ஹாரி- மெர்க்கலின் திருமணத்தால் அந்நாட்டுக்கு பல வகைகளிலும் வருமானம் வரும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறு கிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஓட்டல்களில் விருந்தினர்கள் தங்கல், உணவுக்குச் செலவிடுதல் மூலமாக 200 மில்லியன் பவுண்டுகளும், மக்கள் கொண்டாட்டங்களின் மூலம் 150 மில்லியன் பவுண்டுகளும், திருமண நினைவுச் சின்னங்களின் விற்பனை மூலம் 50 மில்லியன் பவுண்டுகளும், விளம்பரங்களின் மூலம் 100 மில்லியன் பவுண்டுகளும் கிடைக்குமாம்.

இதன்மூலம் இங்கிலாந்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், சுற்றுலாத் துறையும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு இளவரசர் வில்லியமின் திருமணத்தின்போது இங்கிலாந்துக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வருகைபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story