நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு


நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2018 3:00 AM IST (Updated: 21 Jan 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரங்களை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் அறிவித்துள்ளது.

நெல்லை,

நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரங்களை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் அறிவித்துள்ளது.

நடுவழியில் நிறுத்தப்பட்ட பஸ்


தமிழக அரசு பஸ் கட்டணத்தை நேற்று முன்தினம் இரவு உயர்த்தியது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டன. வழக்கம் போல் தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள், உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு என்று தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் தென்காசியில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டு இருந்தது. பாவூர்சத்திரம் அருகே வந்த போது, கண்டக்டருக்கும், பயணிகளுக்கும் இடையே கட்டண உயர்வு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் பஸ் நெல்லையை நோக்கி புறப்பட்டு வந்தது.

அதேபோல் நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை பஸ் கட்டணத்தில் குழப்பம் இருந்தது. இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் ஆங்காங்கே வாக்குவாதம் ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

இந்த நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்து அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு மாலை நேரத்தில் ஏ.சி. பஸ் செல்கிறது. அந்த பஸ்சுக்கு ஏற்கனவே ரூ.585 வசூல் செய்யப்பட்டது.

தற்போது ரூ.925-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏ.சி. அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் ரூ.440-ஆக கட்டணம் இருந்தது. தற்போது ரூ.695-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் சேலம், வேளாங்கண்ணி, ஈரோடு, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கும் கட்டணம் வெளியிடப்பட்டு உள்ளது.

நெல்லை டவுன் பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.3 வசூலிக்கப்பட்டது. தற்போது புதிய கட்டணம் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டருக்கு ரூ.6 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிறுத்தத்தை பொறுத்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.20 வரை பஸ் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு ரூ.9 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. நேற்று முதல் ரூ.12-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் வருமாறு:-





Next Story