நாங்குநேரி அருகே தொழிலாளி கொலை: “கூலிப்படை மூலம் தீர்த்து கட்டி உள்ளனர்” உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன் பேட்டி


நாங்குநேரி அருகே தொழிலாளி கொலை: “கூலிப்படை மூலம் தீர்த்து கட்டி உள்ளனர்” உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 21 Jan 2018 2:30 AM IST (Updated: 21 Jan 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலையில், கூலிப்படை மூலம் தீர்த்து கட்டி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன் கூறினார்.

நாங்குநேரி,

நாங்குநேரி அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலையில், கூலிப்படை மூலம் தீர்த்து கட்டி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன் கூறினார்.

தொழிலாளி கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சன்குளத்தை சேர்ந்தவர் கேத்திரபால்(வயது 53). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது போலீஸ் உடையில் வீட்டுக்குள் வந்த ஒருவர், தூங்கிக்கொண்டு இருந்த கேத்திரபாலை தட்டி எழுப்பி வீட்டுக்கு வெளியில் அழைத்து சென்று உள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியில் நின்ற ஒரு மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்து வருவதால், அவருடைய உடலை பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் மேல் விசாரணை நடத்தினார்.

கூலிப்படை மூலம்....


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவர் கொலை வழக்கில், கேத்திரபால் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்தநிலையில் கேத்திரபால் கொலை செய்யப்பட்டதால், பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், மஞ்சன்குளத்தில் கேத்திரபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை வைத்து இந்த கொலை நடந்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை கும்பலில் ஒருவன் போலீஸ் உடையில் வந்ததாக கூறுவது உண்மையல்ல. எனினும் இந்த கொலை வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறோம். இன்னும் ஒரு சில நாட்களில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றார்.

Next Story