பஸ் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:15 AM IST (Updated: 21 Jan 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி, திருக்கோவிலூரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி,

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு, நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வு இரு மடங்காக இருந்து வருவதாகவும், இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவே, கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியில் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் திருக்கோவிலூர் பஸ்நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், துணை செயலாளர் சவுரிராஜன், நிர்வாக கு ழுஉறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் செம்மலை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story