மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில், மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
மானியம்
அம்மா இருசக்கர வாகன திட்டம் என்ற புதிய திட்டத்தை 2017-18-ம் நிதி ஆண்டில் தமிழக அரசு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125 சி.சி. திறன் கொண்ட புதிய ஸ்கூட்டர்களுக்கு, அதன் விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் தொகை பயனாளிக்கு அரசால் மானியமாக வழங்கப்படும். அத்தகைய ஸ்கூட்டர்கள் 1.1.2018-க்கு பின்னர் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற நிறுவன பணியில் உள்ள மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம்
தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊரின் கடைநிலைப்பகுதி, மலை பகுதி, ஆதரவற்ற மகளிர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி பெண், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பம் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 5-ந்தேதி வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளப்படும். பயனாளிகள் தாங்கள் விரும்பும் 125 சி.சி. திறன் கொண்ட ஸ்கூட்டரை வாங்க சொந்த நிதியில் இருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்று, இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
ஆவணங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பயனாளியின் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் நகல், வேலை வழங்கும் அலுவலரால் அல்லது நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவன தலைவர் அல்லது சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதிய சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை நகல், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள், புகைப்படம், சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், மோட்டார் சைக்கிள் விலைப்புள்ளி விவரம் (இன்வாய்ஸ்) ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story