கரியகோவில் அணையில் இருந்து திறந்த தண்ணீர் பெத்தநாயக்கன்பாளையம் வந்தடைந்தது


கரியகோவில் அணையில் இருந்து திறந்த தண்ணீர் பெத்தநாயக்கன்பாளையம் வந்தடைந்தது
x
தினத்தந்தி 21 Jan 2018 4:15 AM IST (Updated: 21 Jan 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

கரியகோவில் அணையில் இருந்து திறந்த தண்ணீர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை வந்தடைந்தது.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்டது கரியகோவில் அணை. இந்த அணை உபரிநீர் மற்றும் அணையில் தேக்கி வைக்கப்பட்டு திறந்து விடப்படும் தண்ணீர் வசிஷ்ட நதி வழியாக செல்லும். அணை திறக்கப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

தண்ணீர் திறப்பு

தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரியகோவில் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பாப்பிநாயக்கன்பட்டி, தும்பல், பனமடல், இடையபட்டி, படையாச்சியூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிஷ்டநதியில் பாய்ந்து வந்தடைந்தது. இதனை சுற்று வட்டார மக்கள் பயன்படுத்துகிறார்கள். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். 

Next Story