முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏ.சி. மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி
முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் கட்டண வித்தியாசத்தை செலுத்தி ஏ.சி. மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

ஏ.சி. மின்சார ரெயில்
மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது ஏ.சி. ரெயில்கள் விரார் - சர்ச்கேட், போரிவிலி - சர்ச்கேட் இடையே இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாலும், அதிக கட்டணம் என்பதாலும் தற்போது ஏ.சி. மின்சார ரெயில்கள் காலியாகவே ஓடுகின்றன.
இந்தநிலையில் மின்சார ரெயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்களை ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பயணம் செய்ய அனுமதி
இதையடுத்து மின்சார ரெயிலில் முதல்வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பயணிகள் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணத்திற்கும், ஏ.சி. மின்சார ரெயில் சீசன் டிக்கெட் கட்டணத்திற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை செலுத்தி ஏ.சி. ரெயில்களில் பயணம் செய்யலாம்.
தற்போது போரிவிலி - சர்ச்கேட் இடையே மாதாந்திர முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணமாக ரூ.755 வசூலிக்கப்படுகிறது, ஏ.சி. ரெயில் சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.1640- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் வித்தியாச தொகையான ரூ.885-யை ஏ.சி. ரெயில்களில் நிற்கும் டிக்கெட் பரிசோதகர்களிடம் செலுத்தி ஏ.சி. ரெயிலுக்கான சீசன் டிக்கெட்டை பெற்று பயணம் செய்யலாம்.
பயணிகள் ஜூன் 26-ந் தேதி வரை மட்டுமே இதுபோல கட்டண வித்தியாச தொகையை செலுத்தி ஏ.சி. ரெயிலுக்கான சீசன் டிக்கெட்டை பெற முடியும்.

Related Tags :
Next Story