அன்புக்கு அடிபணிந்த பாசக்கணவர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் டாமி குடும்பத்தினருக்கு, கால்நடைகளை வளர்ப்பதுதான் முக்கிய தொழிலாக இருந்து வந்தது. இதை கடந்த நான்கு தலைமுறையாக செய்துவருகிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த கால்நடை தொழிலையும், கால்நடை பண்ணை நடத்துவதையும் டாமி நிறுத்திவிட்டார். அதோடு, கால்நடை தொழிலுக்கு பயன் படுத்திய பண்ணைகளை... விலங்குகள் நல பாதுகாப்பு மையமாக மாற்றிவிட்டார். ஏன் இந்த மாற்றம் என்று டாமியை கேட்டால், அவரது மனைவி ரெனீயை கைகாட்டுகிறார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு ரெனீயை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட டாமி, ரெனீயின் அன்பு கட்டளைக்கு அடிப்பணிந்தே கால்நடை தொழிலை விட்டிருக்கிறார். ரெனீக்கு விலங்குகள் மீது அளவற்ற பாசமாம். கால்நடைகள் டாமியின் பண்ணையில் அடைக்கப்பட்டிருப்பதும், அதை மையப்படுத்தி தொழில் நடப்பதும் ரெனீக்கு நெருடலை உண்டாக்க, கணவரிடம் அதை விளக்கியிருக்கிறார். ஆனால் முதலில் டாமி கண்டுகொள்ளவில்லையாம்.
இப்படியே சில வருடங்கள் கழிய, பண்ணையில் இருக்கும் கால்நடைகளுக்கு ரெனீ செல்லப்பெயர் வைத்து அன்பு மொழியில் பேச ஆரம்பித்திருக்கிறார். விலங்குகளிடம் இப்படி அன்பு காட்ட வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், டாமி. ஆனால் ரெனீயின் அன்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் டாமி இறங்கினார். பால் உணவுகள் சாப்பிடுவதை குறைத்தார். பாலாடைக்கட்டி, வெண்ணெய் ஆகியவற்றுடன் இறைச்சி சாப்பிடுவதையும் நிறுத்தினார். ஆனாலும் ரெனீ மனம் மாறுவதாக இல்லை. விலங்குகளை வதைத்து தொழில் செய்வதை நிறுத்தும் முடிவில் ரெனீ உறுதியாக இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் டாமியை விவாகரத்து செய்யவும் ரெனீ தீர்மானித்துவிட்டார். அதனால் மனம் மாறிய டாமி மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து கால்நடை தொழிலை கைவிட்டுவிட்டார்.
‘‘நான் விலங்குகளைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தேன். டாமி ஆடு, மாடுகள் விற்பனை செய்யும் தொழிலை கைவிடவில்லை என்றால் நான் அவரை விட்டு விலகவும் தயாராக இருந்தேன். இறுதியில் நான் வெற்றி பெற்றேன். பல தலைமுறைகளாக பார்த்து வந்த ஒரு வேலையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எனக்காக இந்த காரியத்தைச் செய்த டாமியை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன்’’ என்கிறார் ரெனீ.

Related Tags :
Next Story