உணவு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
நெல்லையில் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
நெல்லை,

ஆய்வுக்கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் மற்றும் பால் வழிகாட்டுதல் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் ஓட்டல் உரிமையாளர்கள் மாநில உரிமம் பெற்றும், ரூ.12 லட்சத்துக்கு குறைவாக விற்பனையாகும் ஓட்டல் உரிமையாளர்கள் பதிவு சான்று பெற்றும் ஓட்டல்களை நடத்த வேண்டும். உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாதவர்கள் ஓட்டல், உணவு தொழில் செய்வதற்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக பதிவு, உரிமம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த அவகாசம் வருகிற 31-ந் தேதி முடிவடைகிறது. எனவே, உணவு தொழில் செய்வோர் இந்த மாத இறுதிக்குள் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரை அணுகி, பதிவு அல்லது உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
அதன் பிறகு பதிவு செய்யாதவர்கள் அல்லது உரிமம் பெறாதவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்களின் மீது 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவு வணிகர்கள் மறு சுழற்சிக்கு பயன்படாத 50 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. 50 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் பாக்கெட்
பால் உற்பத்தியாளர்கள் பாலின் தரம் மற்றும் பால் பாக்கெட்டுகளில் குறிப்பிட வேண்டிய விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிகளவில் பால் உணவு மாதிரிகளை எடுத்து, பரிசோதிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 500 நகரங்கள் தரவரிசை பட்டியிலிடப்படுகிறது. இதில் நெல்லை மாநகராட்சி இந்த பட்டியலில் முதன்மை பெறும் வகையில் தூய்மையாக பராமரிக்க வணிகர்களும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், மாநகராட்சி நல அலுவலர் பொற்செல்வன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் சின்னத்துரை, தென்காசி முஸ்தபா நாசர், நெல்லை ஓட்டல் சங்க பொருளாளர் மணிகண்டன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story