எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் நடிகர் ராமராஜன் பேச்சு
எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்று நடிகர் ராமராஜன் பேசினார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. விழாவில் அ.தி.மு.க. கொள்கை பரப்புச்செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பித்துரை கொடியேற்றி வைத்து பேசினார். விழாவில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் விரைவில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்ன நினைத்தாரோ அந்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிறைவேற்றி வருகிறார்கள்.
மக்களின் தேவையை அறிந்து செயல்படுகிற இயக்கம் அ.தி.மு.க. தான். அதை யாராலும் மறுக்க முடியாது, மறைத்து விடமுடியாது. அ.தி.மு.க. என்பது பெரிய ஆலமரம். இதை யாராலும் அசைக்க முடியாது. அ.தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக புதுரோடு, எரியோடு, தண்ணீர்பந்தம்பட்டி ஆகிய ஊர்களில் கொடியேற்று விழா நடந்தது. விழா முடிந்ததும் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தேசிய கட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அ.தி.மு.க.வை அழிக்கமுடியாது. இது மக்களின் இயக்கம். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றவகையில் செயல்படுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம், என்றார்.

Related Tags :
Next Story