கவிஞர் வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது


கவிஞர் வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த கவிஞர் வைரமுத்துவை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பா.ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாலா தலைமை தாங்கினார். கும்பகோணம் ஒன்றிய செயலாளர் கணேஷ்குமார், ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், பிராமணர் சங்க தலைவர் வாசுதேவன், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் திருவேங்கடம் மற்றும் பலர் கலந்து கொண்டு, ஆண்டாள் பற்றி வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பாதபூஜை

ஆர்ப்பாட்டத்தின்போது ஆண்டாள் போல வேடமிட்டிருந்த சிறுமி ஒருவருக்கு பாத பூஜை நடைபெற்றது. 

Next Story