பஸ்கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பஸ்கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

பஸ்கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க மாநில செயலாளர் லட்சுமணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, இளைஞர் மன்ற செயலாளர் செல்வகுமார், தெருவியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது போல் நள்ளிரவில் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஒழுங்கு முறை ஆணையத்தை அமைத்து, அதன் ஆலோசனையை பெற்று முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதையெல்லாம் விட்டு சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. எதைப்பற்றியும் கவலைப்படாத இந்த அரசு மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு குழுவை அமைத்து அதன் பிறகாவது பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story