அரசு பணிகளில் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


அரசு பணிகளில் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jan 2018 4:00 AM IST (Updated: 22 Jan 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணிகளில் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

அரசு பணிகளில் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வழக்கு

மும்பை மாநகராட்சியில் கடைநிலை ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 15 பேர், ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியின் குமாஸ்தா பணியிடத்துக்கு நடைபெற்ற தேர்வில் தாங்கள் 48 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று இருந்தோம். 48 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டபோதிலும், எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை” என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, பாரதி தாங்க்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், “தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது” என்று கூறினார்.

உத்தரவு

வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், அரசு பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும், மாநகராட்சி என்பது பொது அமைப்பு என்பதால், தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story