நுங்கம்பாக்கத்தில் நடந்த ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் துப்புதுலங்குகிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகள் பற்றி போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கம், அப்பு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 19). இவர் கிண்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.டி.ஐ. படித்துவந்தார். நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்த ரஞ்சித், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் வந்தபோது மர்மநபர்களால் விரட்டி படுகொலை செய்யப்பட்டார். ரஞ்சித்தின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க துணை கமிஷனர் பர்வேஸ்குமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், மாணவர் ரஞ்சித் கழுத்தில் வெட்டு காயத்துடன் ரத்தம் சொட்ட ஓடும் காட்சியும், அவரை பின்தொடர்ந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. இந்த காட்சியை வைத்து கொலையாளிகள் யார்? என்று துப்புதுலக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
ரஞ்சித்தின் செல்போனில் யார் பேசினாலும் அந்த பேச்சு பதிவாகிவிடும். அதுபோல ரஞ்சித் கொலை செய்யப்படும் முன்பு மர்மநபர் ஒருவர் பேசிய பேச்சு செல்போனில் பதிவாகி உள்ளது. அதில் மர்மநபர் அந்த பெண்ணை மறந்துவிடு, இல்லாவிட்டால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று ரஞ்சித்தை மிரட்டுவது பதிவாகி உள்ளது. இதனால் காதல் பிரச்சினையில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மிரட்டிய நபர் பேசிய செல்போன் நம்பரை அடிப்படையாக வைத்தும் விசாரணை நடக்கிறது.
நேற்று சந்தேகத்தின்பேரில் 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் மீது போலீசாருக்கு தீவிர சந்தேகம் இருந்தது. அவர் போதையில் இருந்ததால் போதை தெளிந்த பிறகு தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் கொலையாளி இல்லை என்று தெரியவந்ததால் நேற்று மாலை அவரை போலீசார் விடுவித்துவிட்டனர்.
ரஞ்சித்தை தீர்த்துக்கட்டிய கொலையாளிகள் பட்டியலில் 3 பேர் வரை இருக்கலாம் என்று கருதுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் கூறினார்கள்.

Related Tags :
Next Story