கடற்படையில் பட்டதாரிகள் சேர்ப்பு
இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது.
தற்போது கோர்ஸ் காமென்சிங் ஜன-2018 பயிற்சியின் கீழ் ‘நேவல் அர்மாமென்ட் இன்ஸ்பெக்சன் கேடர் (என்.ஏ.ஐ.சி.)’ மற்றும் ‘எக்சிகியூட்டிவ் பிராஞ்ச்’ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் பணியிடங்கள் ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும் பணியாகும். என்.ஏ.ஐ.சி. பிரிவு பணிகள் பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும். எக்சிகியூட்டிவ் பிராஞ்சில் 48 பேரும், டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் 60 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 2-1-1994 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பி.இ., பி.டெக் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
நுண்ணறிவுத்திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகளுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 25-1-2018-ந் தேதி வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nausenabharti.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Related Tags :
Next Story