தாதுவள நிறுவனத்தில் அதிகாரி பணிகள்
தாதுவள நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலைக்கு 203 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனம் சுருக்கமாக என்.எம்.டி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர், முதுநிலை மேலாளர், உதவிப் பொது மேலாளர், மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 163 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை காண்டிராக்டு மற்றும் டெபுடேசன் அடிப்படையிலான பணியிடங்களாகும்.
மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சேப்டி, டவுன் அட்மின், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், எச்.ஆர்.டி. போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
கல்வித்தகுதி:
எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல் போன்ற என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள், புகைப்படம் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் 31-1-2018-ந் தேதிக்குள் Dy. General Manager (Personnel) (R&P), NMDC Ltd., 103311/A, Khanij Bhavan, Castle Hills, Masab Tank, Hyderabad 500 028 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும்.
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி, மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 44 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
வெல்டிங், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன் பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nmdc.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story