ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்கள்


ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்கள்
x
தினத்தந்தி 22 Jan 2018 12:53 PM IST (Updated: 22 Jan 2018 12:53 PM IST)
t-max-icont-min-icon

பாரத ஸ்டேட் வங்கியில் 8 ஆயிரத்து 301 கிளார்க் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் பெரியது இந்திய ஸ்டேட் வங்கி. சுருக்கமாக எஸ்.பி.ஐ. என அழைக்கப்படும் இந்த வங்கி ஆண்டு தோறும் பல ஆயிரம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த ஆண்டும் சுமார் 17 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும் என்று நிபுணர்கள் கணித்திருந்தார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் கிளார்க் தரத்திலான ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 301 பேரை தேர்வு செய்ய தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 7 ஆயிரத்து 200 இடங்கள் புதிய பணியிடங்களாகும். 1101 பணியிடங்கள் பின்னடைவுப் பணிகளாகும். இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 885 இடங்களும், மகாராஷ்டிராவில் 730 இடங்களும், ஒடிசா, குஜராத், மேற்குவங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்களும் உள்ளன. தமிழகத்திற்கு 346 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் உள்ளன. பின்னடைவுப் பணியிடங்களில் தமிழகத்திற்கு 52 இடங்கள் இருக்கின்றன.

இனி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1990 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் பிராந்திய மொழியில் வாய்மொழித்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளாக நடை பெறும்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.sbi.co.in/careers/ongoingrecruitment.html என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

துணை மேலாளர் பணிகள்:

மற்றொரு அறிவிப்பின்படி டெபுடி மேனேஜர் தரத்திலான சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 21 முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு. சி.ஏ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி 28-1-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், இதுபற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://bank.sbi/careers, www.sbi.co.in/careers ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.

Next Story