சாவில் மர்மம் இருப்பதாக கூறி பாதிரியார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
கிறிஸ்தவ அமைப்பினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
தாம்பரம்,
சாவில் மர்மம் இருப்பதாக கூறி பாதிரியார் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கிதியோன் (வயது 44). பாதிரியாரான இவர், கல்பாக்கம் அடுத்த அடையாளசேரி பள்ளிக்கூட தெருவில் தேவாலயம் நடத்தி வந்தார். திருமணம் ஆகவில்லை. இதனால் அங்கேயே ஒரு குடிசையில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 20-ந்தேதி குடிசையில் பாதிரியார் கிதியோன், மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலில் சிறு காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமரசம் செய்த போலீசார், பாதிரியார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வந்த பாதிரியாரின் உறவினர்கள், பாதிரியார் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி ஆஸ்பத்திரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து பாதிரியார் கிதியோனின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
பாதிரியார் கிதியோன் சாவில் மர்மம் உள்ளது. அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வருடம் தேவாலயத்தை சிலர் தீ வைத்து கொளுத்தினர். அதன் தொடர்ச்சியாகவே பாதிரியாரை அடித்துக்கொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்தது போல் போலீசாரை நம்ப வைக்க அவரது உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன் பாதிரியாரின் உறவினர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, கட்சி நிர்வாகி ஆலை சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 5 மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
உறவினர்கள் வாங்க மறுத்து விட்டதால் பாதிரியாரின் உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story