முழு அடைப்பு போராட்டம் நடந்தாலும் அமித்ஷா, 25-ந் தேதி கர்நாடகம் வருகை
முழு அடைப்பு போராட்டம் நடந்தாலும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 25-ந் தேதி கர்நாடகம் வருவது உறுதியாகி உள்ளது. #Karnataka #AmitShah
பெங்களூரு,
முழு அடைப்பு போராட்டம் நடந்தாலும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 25-ந் தேதி கர்நாடகம் வருவது உறுதியாகி உள்ளது. அன்றைய தினம் மைசூருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மாற்றத்திற்கான யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த யாத்திரை வருகிற 25-ந் தேதி மைசூருவில் நடைபெற உள்ளது. மைசூருவில் பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கு இல்லாததால், அங்கு கட்சியை பலப்படுத்த கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்தார்கள். இதையடுத்து, மைசூருவில் நடைபெறும் மாற்றத்திற்கான யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ள தீர்மானித்தார்.
ஆனால் அன்றைய தினம் மகதாயி நதிநீர் பிரச்சினையில் தீர்வு காணக் கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாலும், மறுநாள் (26-ந் தேதி) டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அமித்ஷா கலந்துகொள்ள இருப்பதாலும், மைசூருவில் நடைபெறும் மாற்றத்திற்கான யாத்திரையில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், 25-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தாலும், மைசூருவில் நடைபெறும் மாற்றத்திற்கான யாத்திரையில் திட்டமிட்டப்படி அமித்ஷா கலந்துகொள்வதுடன், அன்றைய தினம் மாலையில் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பேச இருக்கிறார். இந்த தகவலை பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி செய்துள்ளனர். மைசூருவில் கட்சியை பலப்படுத்தவும், சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் அமித்ஷா கர்நாடகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் வருகிற 25-ந் தேதி டெல்லியில் இருந்து கர்நாடகம் வரும் அமித்ஷா, மைசூரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை குறித்து எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Related Tags :
Next Story