கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
வேலூரில் நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணி மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேலூர்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று வேலூர் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து வேலூர் சுற்றுலா மாளிகையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுகூட்டம் நடத்தினார்.
வேலூர் சுற்றுலா மாளிகையில் இருந்து நேற்று காலை கவர்னர் பன்வாரிலால் புரோகித் காட்பாடி காந்திநகரில் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட சென்றார்.
கருப்புக்கொடி காட்ட முயற்சி
அப்போது அவருக்கு கருப்புக்கொடி காட்ட தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் விருதம்பட்டில் கருப்புக்கொடியுடன் திரண்டிருந்தனர்.
இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வேலூரில் இருந்து, காட்பாடிக்கு கவர்னர் வந்தபோது தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டமுயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சிலர் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கருப்புக்கொடி காட்டமுயன்றதால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடுத்து நிறுத்தியதால் கருப்புக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story