திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்; சிதறிய வீரர்கள் 26 பேர் காயம்
திண்டுக்கல் அருகே பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 390 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளையர்கள் சிதறி ஓடினர். காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 26 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவை அடுத்த உலகம்பட்டியில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் கேலரி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, விராலிமலை, மணப்பாறை, சேலம், நாமக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், புகையிலைப்பட்டி, கொசவபட்டி, முத்தழகுபட்டி, தவசிமடை, பஞ்சம்பட்டி, நத்தம் உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 390 காளைகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.
களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் முண்டியடித்தனர். சில காளைகள் யாருடைய பிடியிலும் சிக்காமல் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போன்று பாய்ந்து சென்றன. சில காளைகளின் உரிமையாளர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வண்ணப்பொடிகள், விளக்கெண்ணெய் போன்ற வழுக்கும் தன்மை உடைய பொருட்களை திமில் பகுதியில் தடவி விட்டிருந்தனர்.
வண்ணப்பொடிகள் தூவப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியே வந்தபோது வண்ணப்பொடிகள் புகை மண்டலம் போன்று ஏற்பட்டதில் மாடு பிடிவீரர்கள் திண்டாடினர். சில காளைகளின் பெயர்களை அறிவித்தவுடன் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்கி கொண்டனர்.
சில காளைகள் மைதானத்திற்குள் வந்ததும் மாடுபிடி வீரர்களை புரட்டி எடுத்தன. இருப்பினும் வீரர்கள் சளைக்காமல் காளைகளுடன் மல்லுக்கட்டினர். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகள் அறிவிக்கப்பட்டன. கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டியும், விசில் அடித்தும் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
காளைகளை அடக்கிய வீரர்கள், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் செல்போன், சைக்கிள், கட்டில், பீரோ, நாற்காலி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. பரபரப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 26 பேர் காயமடைந்தனர்.

Related Tags :
Next Story