முதியவர் வெட்டிக்கொலை சொத்துத்தகராறில் பேரன் வெறிச்செயல்
சேரன்மாதேவி அருகே முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பேரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேரன்மாதேவி,
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ளது புதுக்குடி. இங்குள்ள தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 63). இவருடைய பேரன் சிவபெருமாள் (27).
நேற்று மாலையில் மகாலிங்கத்துக்கும், சிவபெருமாளுக்கும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சிவபெருமாள் அரிவாளால் மகாலிங்கத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து சிவபெருமாள் தப்பிச் சென்றார்.
இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபெருமாளை தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் சொத்துத்தகராறில் தாத்தாவை, பேரன் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
சேரன்மாதேவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் தங்கபாண்டி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் சேரன்மாதேவியில் வாகனங்கள் நொறுக்கப்பட்டதுடன், கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அங்கு இயல்பு நிலை திரும்பிய 2 நாட்களுக்குள் அந்த பகுதியில் மீண்டும் ஒரு கொலை நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story