வேலூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
வேலூரில் நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுபணி மேற்கொண்டார். அப்போது சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வேலூர்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வேலூரில் நேற்று ஆய்வுசெய்து, சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக நேற்று முன்தினம் வேலூருக்கு வந்த அவர் அன்று மாலையில் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு சென்றார். இரவில் காட்பாடியில் நடந்த மாதா அமிர்தானந்தமயி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இரவில் வேலூர் சுற்றுலாமாளிகையில் தங்கினார்.
2-வது நாளான நேற்று காலை 10 மணிக்கு காட்பாடி காந்திநகரில் மாநகராட்சி முதல் மண்டலம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்தெடுக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு, பிரித்தெடுத்து மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து கலெக்டர் ராமன், மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், உதவி கமிஷனர் மதிவாணன் ஆகியோர் கவர்னரிடம் விளக்கிக்கூறினர்.
அதைத்தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட்டார். பின்னர் பஸ் நிலையத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உறுதிமொழியை வாசிக்க, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் திரும்பக்கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குப்பைகளை கூட்டிய அவர், தனது கைகளாலேயே குப்பைகளை அள்ளி குப்பைக்கூடையில் போட்டு, தூய்மைப்பணியை தொடங்கிவைத்தார். அப்போது பென்ட்லேன்ட் மருத்துவமனை தூய்மை பணியில் காயகல்ப விருது பெற்றுள்ளது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், மருத்துவ அலுவலர் ஜெயகீதா ஆகியோர் கூறினர். அதைகேட்ட கவர்னர் கழிவறைகள் மற்றும் வார்டுகளை அதிகாரிகள் வரும்போது மட்டும் சுத்தம் செய்யாமல் தினமும் சுத்தம் செய்யவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அங்கிருந்த ஒரு பெண்ணிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கொடுத்து படிக்க சொன்னார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் தனிநபர் கழிப்பிடம் குறித்து, பெண்கள் நாடகம் நடித்து காட்டினர். நாட்டுப்புற பாடல்கள் மூலமும் விளக்கினர். அப்போது தனிநபர் கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் மலம் கழிக்க சென்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் விளக்கினர். இதற்காக பெண்கள் திறந்தவெளியில் மலம்கழிக்க செல்லும்போது ஒருவர் செயினை பறித்துக்கொண்டு ஓடுவது போன்றும் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
பின்னர் அங்கிருந்து சுற்றுலா மாளிகைக்கு சென்ற அவர் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 39 பேர் மட்டுமே மனுகொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்கள் மனுகொடுக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் சுற்றுலா மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.
வேலூரில் நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணி மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Tags :
Next Story