பணகுடி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை


பணகுடி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2018 3:00 AM IST (Updated: 23 Jan 2018 5:51 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே, மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பணகுடி,

பணகுடி அருகே, மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஒப்பந்த தொழிலாளி

ஜார்கண்ட் மாநிலம் ஜோன்கோ ஊரைச் சேர்ந்தவர் நாராயண சிங் (வயது 41). இவர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மகேந்திரகிரிக்கு வடபுறம் புண்ணியவாளன்புரம் அருகே நான்கு வழிச்சாலையில் ரோட்டோரம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் உடல் கருகிய நிலையில் நாராயணசிங் பிணமாக தொங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன், டிரான்ஸ்பார்மரில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த நாராயணசிங் உடலை மீட்டு, கீழே கொண்டு வந்தனர். பின்னர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

நாராயண சிங், டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story