கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வருசாபிஷேக விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 66–ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.
காலை 10.30 மணிக்கு சாலை கோபுரம் மற்றும் சுவாமி– அம்மன் சன்னதி கோபுரங்களின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் மூலஸ்தான சுவாமி– அம்பாளுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமி– அம்பாள் திருவீதி உலா
விழாவில் முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, முன்னாள் அறங்காவலர் திருப்பதி ராஜா, கம்மவார் சங்க தலைவர் அரிபாலகன், தொழில் அதிபர்கள் கிருஷ்ணமூர்த்தி, திலகராஜ் ஆறுமுகசாமி, நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவில் யாகசாலையில் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி– அம்பாள் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கட்டளைதாரர் வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story