பாளையங்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை


பாளையங்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2018 2:30 AM IST (Updated: 23 Jan 2018 6:27 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெகநாதன் (தூத்துக்குடி), கோலப்பன் (குமரி), மாவட்ட நிர்வாகிகள் ஆதிநாராயணன், ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்பு வரவேற்று பேசினார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணித்தன்மைக்கு ஏற்ப வருவாய்த்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் கல்யாண்குமார், சண்முகம், பாபு, மாரிராஜா, சங்கரநாராயணன், குமார், முகமதுபுகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுப்பு எடுத்து போராட்டம்

அப்போது, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் குருசந்திரன் கூறும் போது, “வருவாய்த்துறை அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது 9 மண்டலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பிறகும் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், அடுத்த மாதம் (பிப்ரவரி) 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவோம்“ என்றார்.

Next Story