காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். கொடைரோடு அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கொடைரோடு,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள தர்மாபுரி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடைரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசாரும், அம்மையநாயக்கனூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த ஆண் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த ராஜகுரு மகன் சோலைகுருசாமி (வயது 25), என்றும், பிணமாக கிடந்த பெண் திருவேடகம் அருகே உள்ள தச்சம்பத்துவை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகள் கவுசல்யா (17) என்பதும் தெரியவந்தது. இதில் சோலை குருசாமி ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கவுசல்யா சோழவந்தானில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கும், சோலைகுருசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் அவர்களின் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் காதல் ஜோடி 2 பேரும் நேற்று காலையில் கொடைரோடு அருகே மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்முன் பாய்ந்து காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story