2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது ஏன்? உருக்கமான தகவல்கள்
எடப்பாடி அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
எடப்பாடி,
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சித்தூர் ஒருவாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 30). இவருடைய மனைவி பழனியம்மாள்(24). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு(7) என்ற மகனும், ஸ்ரீஜா(5) என்ற மகளும் இருந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் மாலை பழனியம்மாள், தன்னுடைய 2 குழந்தைகள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை செய்து விட்டு, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
உருக்கமான தகவல்கள்
விசாரணையில் பல்வேறு உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜியும், பழனியம்மாளும் கரும்பு வெட்டும் வேலைக்கு ஒன்றாக சென்று வந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறால் மனம் உடைந்த ராஜி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு கரும்பு வெட்ட சென்ற போது, கணவன்-மனைவி இடையே கடன் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது உடன் வேலைபார்த்தவர்கள் கணவன்-மனைவி சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.
பல் வலி
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ராஜி, இரு குழந்தைகளையும் பள்ளியில் விட்டு விட்டு நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கணவர் ராஜியிடம் தனக்கு பல் வலிப்பதாக பழனியம்மாள் தெரிவித்துள்ளார். அதற்கு நாம் வேலை பார்க்கும் நாராயணனிடம் பணம் வாங்கி கொண்டு உன் தம்பி காளியப்பனை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று வா என்று ராஜி கூறியதாக தெரிகிறது. அதன்படி நாராயணனிடம் பழனியம்மாள் பணம் வாங்க சென்ற போது, கடன் பிரச்சினையை மனவேதனையுடன் கூறி உள்ளார். அதற்கு அவரும் கடனை அடைக்க உதவுவதாக கூறி உள்ளார்.
குழந்தைகளுடன் தற்கொலை
பின்னர் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பழனியம்மாள் வாழ பிடிக்காமல் விரக்தி அடைந்துள்ளார். அவர் தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்படும் என்று கருதி உள்ளார். இதனால் தனது 2 குழந்தைகளும் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து திரும்பி வந்தவுடன் குழந்தைகள் மற்றும் தன் மீது பழனிம்மாள் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து விட்டார். இதில் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மேற்கண்டவாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே இறந்த 3 பேரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Tags :
Next Story